இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

இரத்தான முகாம் 2012

நாச்சிகுளம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி இரத்தவங்கி ஆகியவை இனைந்து நடத்திய இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் கடந்த 23/12/2012 அன்று நாச்சிகுளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைப்பெற்றது. ..

ஹஜ் பெருநாள் தொழுகை-2012

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. காலை சரியாக 7 மணியளவில், மழையின் காரணமாக மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிலேயே தொழுகை நடைபெற்றது.....

கூட்டுக் குர்பானி -2012

நாச்சிகுளம் கிளையின் சார்பாக இந்த ஆண்டும் ஹஜ் கூட்டுக் குர்பானி சிறப்பாக வசூலிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது. 9 மாடுகள் மற்றும் 24 ஆடுகள் குர்பானியாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்........

இறைஇல்லத்திற்கு வாரி வழங்கிடுவீர்..

நாச்சிகுளத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிக்கு தங்களால் இயன்ற பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மறுமையில் அதன் நன்மையை அடைய தாராளமாக வாரி வழங்கிடுங்கள்..

சாலை சீர் செய்யும் பணியில்... நாச்சிகுளம் TNTJ

நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று 26-10-2012 காலை தொண்டர் அணியின் சார்பாக மழையால் சேதமடைந்த கீழத்தெரு சாலையை சரி செய்யும் பணி நடைபெற்றது. ...

ஆண்களுக்கான தர்பியா முகாம்

நாச்சுிகுளம் கிளை சார்பாக கடந்த 28.10.12 அன்று காலை 9.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் தர்பியாவை சிற்பபாக நடத்தினார். ..


Tuesday, 21 May 2013

மரண அறிவிப்பு (20-5-2013)

நாச்சிகுளம், ஜும்ஆ பள்ளிதெரு முகம்மது நாசிர் (சீமான்) அவர்களின் தகப்பனாராகிய வருசை முகம்மது அவர்கள் 20-5-2013 இன்று இரவு 8 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்கள்.

ஜனாஷா தொழுகை நேரம்  பின்னர் அறிவிக்கப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.

Sunday, 12 May 2013

மார்க்க சொற்பொழிவு


 நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 11-5-2013 இன்று இஷா தொழுகைக்கு பின் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் அமீன் அவர்கள் வெட்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


மார்க்க சொற்ப்பொழிவு


 நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 9-11-2013 அன்று மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் மார்க்க சொற்ப்பொழிவு நடைபெற்றது.

இதில் அமீன் அவர்கள் தர்மம் என்ற தலைப்பில் உரையாற்றினார். 


ஆன்லைன் மார்க்க சொற்ப்பொழிவு மற்றும் துபை ஆலோசனைக் கூட்டம்


 நாச்சிகுளம் வாழ் அமீரக கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று ஒருங்கினைப்பு கூட்டம் துபாய் ஹோரலன்ஸ் மர்கஸில் அஷர் தொழுகைக்கு பிறகு மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. 

இதில் துபாய் மண்டல செயலாளர் அஸ்ரப் அலி முன்னிலையில் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் தலைமைலும் நடைபெற்றது. 

இதில் நாச்சிகுளத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக தௌஹீத் பள்ளி இமாம் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “இறை நம்பிக்கையாளனின் பண்புகள்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.

இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.


திருப்பூர் பள்ளிக்கு உதவி (ரூ1535)

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 10-11-2013 அன்று திருப்பூர் SV காலனி பள்ளிக்கு ஜும்ஆ அன்று வசூல் ரூ1535 கட்டிட நிதியாக கொடுக்கப்பட்டது.


Thursday, 9 May 2013

பாங்கு சொல்வதற்கு முன்வந்த சிறுவர்கள்!

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 6-5-2013 அன்று சிறுவர்கள் சிலர் தங்களாக முன்வந்து தவ்ஹீத் பள்ளியில் தினமும் பாங்கு சொல்வாதாகவும், அதற்கான அட்டவனையை தாயரித்து தங்களுக்குள் தேதியையும் பரித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.


பொதுக்கூட்டம் நடத்த கடிதம்


நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 7-5-2013 அன்று மாவட்டம் மற்றும் மாநிலத்திற்கு, நாச்சிகுளத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More