இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Thursday, 24 May 2012

thumbnail

மே-20 கூத்தாநல்லூர் பொதுக் கூட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 

மே-20 அன்று திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சகோதரர் பி.ஜே அவர்கள் சிறப்புரையாற்றினார். 



நாச்சிகுளத்தில் இருந்து 170க்கும் மேற்ப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். 
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

thumbnail

நாச்சிகுளம் கிளையின் இலவச கத்னா

Posted by NACHIKULAM TNTJ  | 

திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளத்தில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 22-05-2012 அன்று இலவசமாக கத்னா செய்துவைக்கப்பட்டது.

Wednesday, 23 May 2012

thumbnail

ECR சாலை விபத்து : களப்பணியில் நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமா அத்

Posted by NACHIKULAM TNTJ  | 

கடந்த 22-05-2012 அன்று திருவாரூர் மாவட்டம், கரியாப்பட்டினத்தை சார்ந்த  இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை வந்து விட்டு பின்னர் திருப்பி செல்லுகையில் 5-30 மணியளவில் அம்மளுர் வேகத்தடையில் ஏறி இறங்குகையில் பின்னால் இருந்த கரியாப்பட்டினம் ஷேக் தாவுது அவர்கள் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்...)


மேற்க்கண்ட சம்பவம் நடைபெற்றதை அறிந்த நாச்சிகுளம் கிளை பொறுப்பாளர்கள் அம்மளுர் விரைந்தனர்.


பின்னர் கால்துறைக்கு தவகல் தெரிவிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மற்றும் திருத்துறைப்பூண்டி தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸூம் வரந்த நிலையில் மறநத்தை உறுதிபடுத்திய பின் தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலமாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு பிரதே பரிசோதனைக்கு பின் உடல் கரியாபட்டினம் கொண்டு செல்லப்பட்டது.
மேற்க்கண்ட சம்பவம் நடைபெற்ற பகுதியில் அமைந்துள்ள வேகத்தடையானது எந்த வித அறிவிப்பு பதகையே அல்லது வேகத்தடையின் மீது எச்சரிக்கை கோடுகள் எதுவும் இல்லாமையே இதற்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த விபத்திற்கு பிறகு அடுத்தனாலே அங்கு எச்சரிக்கை கோடுகள் இடப்பட்டுவிட்டது. ஒரு உயிரை கொடுத்தால் தான் நெடுச்சாலைதுறை இந்த நடவடிக்கையில் இறங்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.  ECR சாலை அமைந்ததும் இப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. சாலையை சரியாக அமைத்த நெடுச்சாலைதுறை எச்சரிக்கை பதகைகளை சரியாக பொறுத்தாததே இது போன்ற சாலை விபத்துக்களுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளது. திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை புறநகர் சாலை  பிரியும் இடத்தில் அதிகமான விபத்துக்கள் நடந்தும் (ECR)  நெடுச்சாலைதுறை இதை கவணத்தில் எடுப்பதாக தெரியவில்லை. 

இச்செய்தியை பார்த்தாவது நெடுச்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா? என்று பார்ப்போம். 


செய்தி சேகரிப்பு : முகம்மது அசாருதீன்,
புகைப்படம் : அப்துல் காதர்.

Sunday, 20 May 2012

thumbnail

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளத்தில் 18-05-2012 அன்று கோடை கால பயிற்சி முகம் நிறைவு நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் கிளை தலைவர் M.ஹாஜமுகைதீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



இதில் மாநில பேச்சாளர் ஜமால் அவர்களும், மாநில கல்லூரி மாணவர் ஹக்கீம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


இதில் மாணவ-மாணவியரின் பேச்சுப்போட்டிகள், சூரா மற்றும் கிராத் போட்டிகள் நடைபெற்றது.

இதில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கிளை நிர்வாகிகள் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள்  பரிசுகள் வழங்கினர்.













பின்னர் தமாம் மண்டல பொறுப்பாளர் முகம்மது அசாருதீன் அவர்கள் தீர்மானங்களை முன்மொழிய அனைவரும் அல்லாஹ் அக்பர் என்று கூறினர்.

பின்னர் கிளை செயலாளர் முகம்மது இம்ரான் அவர்கள் நன்றியுரை உடன் நிறைவடைந்தது.





thumbnail

கூத்தாநல்லூருக்கு - ஆட்டோ அழைப்பு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளத்தில் வீதி வீதியா ஆட்டோவில் கூத்தாநல்லூர் மார்க்க விளக்கப் பிரச்சாரம் குறித்து மக்களுக்கு அழைப்பு  விடுக்கப்பட்டது. காலை 10 மணி முதல் 5 மணிவரை இந்த அழைப்புப்  நடைபெற்றது.

Friday, 18 May 2012

thumbnail

கோடை கால பயிற்சி முகாம்

Posted by NACHIKULAM TNTJ  | 


நாச்சிகுளம் கிளையின் சார்பாக கடந்த 7-05-2012 அன்று முதல் 17-05-2012 வரை ஆண்களுக்கு நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.











அதே போன்று கடந்த 1-05-2012 அன்று முதல் 10-5-2012 வரை பெண்களுக்கு நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tuesday, 15 May 2012

thumbnail

இணைவைப்பிற்கு எதிராக பயான்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் 14-05-2012 அன்று சேலம் இஸ்லாமிய கல்லூரி மாணவர் ஹக்கீம் அவர்கள் இணைவைப்பும் நரக நெருப்பும் என்ற தலைப்பில் இஷா தொழுகைக்கு பிறகு சிறப்புரை நிகழ்த்தினார்.

Saturday, 5 May 2012

thumbnail
Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளத்தில் இன்னும் 15 நாட்களில் ஹந்தூரி எடுக்க இருப்பதை எதிர்த்து நாச்சிகுளம் கிளையின் சார்பாக கடந்த 04-05-2012 அன்று இணைவைப்பிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் ராஜ் முகம்மது MISC அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top