இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Thursday, 28 June 2012

thumbnail

கோக், பெப்சியில் ஆல்கஹால் இருக்காம்...!

Posted by NACHIKULAM TNTJ  | 

கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் பல்லி மிதக்கும், மூடி கிடக்கும், பூச்சி இருக்கும் என்பதெல்லாம் போய் இப்போது அதில் ஆல்கஹாலும் கலந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஒரு லிட்டர் பாட்டிலில் 10 மில்லிகிராம் அளவுக்கே இது இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பத்து பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம்.

இதுகுறித்து கோக கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின் கூறுகையில், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும்.

ஆனால் இதை வைத்து கோக்கை மது பானம் என்று கூறி விட முடியாது. இது மென் குளிர்பானம்தான். இந்த குளி்ர்பானத்தை அருந்தலாம் என்று பாரீஸைச் சேர்ந்த இஸ்லாமிய மசூதி ஒன்று சான்றிதழ் அளித்துள்ளது.

பெப்சி நிறுவனமும் இதேபோல இத்தகைய குளிர்பானங்களில் மிக மிக சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது.
கோக் 1886ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் இதை தலைவலி, ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோக்கில் பெரிய அளவில் ஆல்கஹால் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட மது அருந்துவதை தடை செய்யும் இஸ்லாமிய நாடுகளில் இனி கோக்குக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tuesday, 19 June 2012

thumbnail

கோடை கால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி - முழு வீடியோ

Posted by NACHIKULAM TNTJ  | 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற கோடை கால பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சியின் முழு வீடியோ தொகுப்புகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 




































Thursday, 14 June 2012

thumbnail

ரமளான் மாதம் தொடர் உரை - பி.ஜே

Posted by NACHIKULAM TNTJ  | 


Wednesday, 13 June 2012

thumbnail

எஸ்.எம்.எஸ் பரிசு: கொள்ளை லாபம் அடிக்கும் டிவி- செல்போன் நிறுவனங்கள்!

Posted by NACHIKULAM TNTJ  | 

லாட்டரி சீட்டு மோகம் ஒழிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது புதிதாக எஸ்.எம்.எஸ் அனுப்புங்க, பரிசை வெல்லுங்க என்ற கோஷத்துடன் களம் இறங்கியுள்ளன தொலைக்காட்சி நிறுவனங்கள்.

மக்களின் பணம் சம்பாதிக்கும் பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எப்படி எல்லாம் நம் பணம் பறிபோகிறது என்பதைப் பற்றி சின்னதாய் ஒரு ரவுண்ட் அப்.

கேம் ஷோவோ, ரியாலிட்டி ஷோ எந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும் பார்வையாளர்களையும் பங்கேற்கச் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களின் பணத்தை கூட்டுக் கொள்ளை அடிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

உதாரணமாக கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள். சரியான விடையை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கூறுவார்கள். அதை நம்பி உடனே லட்சோப லட்சம் எஸ்.எம்.எஸ்கள் பறக்கும். பரிசு என்னவோ பத்து பேருக்குதான் போகும். ஆனால் இந்த எஸ்.எம்.எஸ் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான லாபம் அடித்து வருகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை.

முன்பெல்லாம் பரிசுக்கு உரிய பதிலை போஸ்ட் கார்டில் எழுத வேண்டும் என்று கூறினார்கள். பின்னர் பரிசுக்குரிய விலை அதிகம் கொண்ட போஸ்ட் கார்டு விற்பனைக்கு வந்தது. அது மத்திய அரசின் தபால் துறையின் வருமானத்தை அதிகரித்தது. ஆனால் இன்றைக்கோ எந்த தொலைக்காட்சி என்றாலும் ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர். எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும். இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

இதேபோல்தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பதிவு செய்ய குறைந்த பட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதேபோலத்தான் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் தங்களை தேர்ந்தெடுக்க எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டுப் போடுங்க என்று கூறுகின்றனர். இதெல்லாம் நம் பணம் நம்மையறியாமலேயே கையை விட்டுப்போகிறது.

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் டோல் ப்ரி சேவையை அறிமுகம் செய்யலாமே?.

நன்றி -தட்ஸ் தமிழ்

Tuesday, 12 June 2012

thumbnail

மரண அறிவிப்பு (நாள் 12-06-2012)

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கீழத்தெரு, மஜிது (டிரைவர்) அவர்களின் தகப்பனார் கபீர் அவர்கள் 12-06-2012 இன்று மதியம் 2 மணியளவில் மணரமடைந்துவிட்டார்கள்.

ஜனாஷா தொழுகை நேரம் இன்ஷா அல்லாஹ்.. நாச்சிகுளத்தில் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.


thumbnail

நாச்சிக்குளம் அமீரகம் வாழ் TNTJ சகோதரர்கள் கூட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 

கடந்த 08-06-2012 அன்று அமீராகம் வாழ் நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை கூட்டம் MKSநைனா முஹம்மத் அவர்களின் தலைமயிலும், மண்டல மக்கள் தொடர்பு செயளாலர் அஷ்ரப் அலி அவர்களின் முன்னிலையிலும் ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் வைத்து நடைபெற்றது. 





இதில் நாச்சிகுளத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தை அதிகப்படுத்துவது குறித்தும், மஸ்ஜித் இப்ராஹீம் (தவ்ஹீத்) பள்ளியை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. 

thumbnail

கல்வி உதவித்தொகை

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளையின் சார்பாக 11-06-2012 அன்று ஒரு மாணவிக்கு 10ம் வகுப்புக்கு படிப்பவருக்கான 2012-2013க்கான கல்வி ஆண்டின் உதவி தொகையை 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் துனைச்செயளாலர் முகம்மது இம்ரான் அவர்கள் வழங்கினார்.

Monday, 11 June 2012

thumbnail

முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!

Posted by NACHIKULAM TNTJ  | 


முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:

அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, 6 June 2012

thumbnail

ஆன்ட்ராய்டு மொபைல்களில் நமது இணையம்

Posted by NACHIKULAM TNTJ  | 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தற்போது மொபைகளில் கூகுலின் ஆன்ட்ராய்டு மென்பொருட்கள் உலகை கலக்கிவருவதை தாங்கள் அறிவீர்கள்.

நமது இணையதளங்களை எளிதாக பார்ப்பதற்காக ஆன்ட்ராய்டு மென்பொருட்களை நாம் உருவாக்கியுள்ளோம்.






  • தலைமை இணையமான www.tntj.net நேரடியாக மொபைல்களில் பார்வையிட Click Download









  • நமது இணையமாக www.nachikulamtntj-news.blogspot.com மென்பொருளை Click Download








  • திருக்குர்ஆன் ரேடியோ மென்பொருளைClick Download 






  • Tuesday, 5 June 2012

    thumbnail

    பொதுக் கூட்டம் வீடியோ

    Posted by NACHIKULAM TNTJ  | 

    மாநில பேச்சாளர் ஜமால் அவர்கள் நாச்சிகுளத்தில் கோடை கால பயிற்சி நிறைவு நிகழ்ச்சியின் போது ஆற்றிய உரை...






    Monday, 4 June 2012

    thumbnail

    அல்லாஹ்வுக்கு இணைவைப்பதை எதிர்த்து

    Posted by NACHIKULAM TNTJ  | 

    இணைவைப்பிற்கு எதிராக நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 2-06-2012 அன்று வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள்...

    இப்பேனர்கள் நாச்சிகுளத்தில் 4 இடங்களில் வைக்கபட்டுள்ளது. நாச்சிகுளத்தில் சந்தன கூடு எடுக்க இருப்பதை தொடர்ந்து இப்பிரச்சாரத்தை நாச்சிகுளம் கிளை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிட தக்கது.

    Friday, 1 June 2012

    thumbnail

    இணைவைப்பிற்கு எதிராக தொடர் பிரச்சாரம்

    Posted by NACHIKULAM TNTJ  | 

    25-05-2012 அன்று இணைவைப்பிற்கு எதிராக நாச்சிகுளம் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் பொதக்குடி இமாம் அவர்களின் சிறப்புரை மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

    26-05-2012 அன்று இணைவைப்பிற்கு எதிராக நாச்சிகுளம் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் திருத்துறைப்பூண்டி இமாம் அவர்களின் சிறப்புரை மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

    27-05-2012 அன்று இணைவைப்பிற்கு எதிராக நாச்சிகுளம் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் திருத்துறைப்பூண்டி மாணவர் ஒருவரின் சிறப்புரை மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்றது.

      If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

    What they says

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
    .Designed - Developed by : Mohamed Azarudeen.
    back to top