இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Friday, 31 August 2012

thumbnail

குஜராத் கலவரம் - 32 பேருக்கு தண்டனை

Posted by NACHIKULAM TNTJ  | 

குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஹெச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கோத்ராவில் நடந்த ரயில் எரிந்த பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்துமத வெறி அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கடும் தாக்குதலில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.

நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில் தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. நரோடா பாட்டியா வழக்கு அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடந்து வந்த வழக்கில் கடந்த 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், முன்னாள் விஹெச்பி தலைவர் பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார். மாயா கோட்னானி தற்போது பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்று அறிவித்தது. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் என மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 7 பேருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஜ்ரங்கி தனது வாழ்நாளை சிறையிலேயே கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நரேந்திமோடிக்கே இதில் முழு பங்கு உள்ள நிலையில் இவர்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. குஜராத் நீதிமன்றம் பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் அதன் லட்சனத்தை நாம் அறிவோம். எனினும் உச்சநீதிமன்றத்தில் மேற்முறையீடு செய்தால் அவர்மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது. இன்ஷா அல்லாஹ்..

thumbnail

விவாத ஒப்பந்தத்தை விமர்சிக்கும் -பொய்யன்.டி.ஜே தளம்

Posted by NACHIKULAM TNTJ  | 


முகைமீன் என்ற முட்டாலின் கட்டுரையும்... அவன் அறியாமையும்....

பிரபல விவாத வியாபாரியான அண்ணனுக்கும் சைபுதீன் ரசாதிக்கும் மத்தியிலே விவாத ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் இந்த நொடி வரை இணையங்களில் வெளியிடப்படவில்லை.

அதனால் இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாக ரசாதிக்கும் அண்ணனுக்கும் நடந்த கடித பரிமாற்றங்களை பார்ப்போம். இருவரும் பகிர்ந்து கொண்ட கடிதங்களே அவர்கள் தரத்தை சொல்லும் கல்வெட்டாக உள்ளது. உண்மையில் மார்க்கத்தில் தெளிவுபெறுவது தான் இவர்களின் நோக்கம் என்றால் அது சம்மந்தமாக அழகிய முறையில் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். ஆனால் இவர்களின் விவாதத்தின் நோக்கம் சத்தியமா அசத்தியமா என்பதை விட நானா? நீயா? ஒரு கை பாத்துருவோம் என்பதுதான் என தெளிவாக அவர்களின் கடிதத்தை படிக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

முதலாவதாக சைபுதீன் ரசாதியை விவாதத்திற்கு அழைக்கிறார்கள் விவாதப்புலி அண்ணனின் தம்பிகள். உடனே பதில் தராத ரசாதி சில மாதங்கள் கழித்து அண்ணனுக்கு கடிதம் எழுதுகிறார். அப்படி கடிதம் எழுதும் அவர் சகோதரர் பீஜே அவர்களுக்கு என்றோ அல்லது வெறுமனே பீஜே அவர்களுக்கு... என்றோ எழுதியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவரோ திரு என்ற வார்த்தையை போட்டு பீஜேயை விளிக்கிறார். திரு என்ற வார்த்தை முஸ்லிம்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. 

முஸ்லிமல்லாத மக்களும், அரசியல்வாதிகளும் தான் இவ்வாறு பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்றே இஸ்லாம் சொல்கிறது.

என்பதாக கட்டுரை தொடர்கிறது... இதில்.. http://intjonline.in/3003.do

//பிரபல விவாத வியாபாரியான அண்ணனுக்கும் சைபுதீன் ரசாதிக்கும் மத்தியிலே விவாத ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தம் இந்த நொடி வரை இணையங்களில் வெளியிடப்படவில்லை.//

தாங்கள் மற்றவர்கள் சரியாக பேசவில்லை என்று கூறிவிட்டு பி.ஜே-வை விவாத வியாபாரி என்று நக்கலடிப்பது தான் இவர்கள் கட்டுரையின் லட்சனமா?

அதனால் இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாக ரசாதிக்கும் அண்ணனுக்கும் நடந்த கடித பரிமாற்றங்களை பார்ப்போம்.

முதலாவதாக சைபுதீன் ரசாதியை விவாதத்திற்கு அழைக்கிறார்கள் விவாதப்புலி அண்ணனின் தம்பிகள். உடனே பதில் தராத ரசாதி சில மாதங்கள் கழித்து அண்ணனுக்கு கடிதம் எழுதுகிறார். அப்படி கடிதம் எழுதும் அவர் சகோதரர் பீஜே அவர்களுக்கு என்றோ அல்லது வெறுமனே பீஜே அவர்களுக்கு... என்றோ எழுதியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவரோ திரு என்ற வார்த்தையை போட்டு பீஜேயை விளிக்கிறார். திரு என்ற வார்த்தை முஸ்லிம்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. முஸ்லிமல்லாத மக்களும், அரசியல்வாதிகளும் தான் இவ்வாறு பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் என்றே இஸ்லாம் சொல்கிறது.

இதில் ஆஆஆ "திரு" என்று பயன்படுத்திவிட்டார்கள் "திரு" என்பது மாற்றுமதத்தவர்களை தான் அழைப்பார்கள். முஸ்லிம்களை அழைக்கலாமா? என்ற உலகலாவிய கேள்வியை கேட்டுள்ளனர்...

திருக்குர்ஆன் என்ற வார்தையில் ”திரு” என்பது மரியாதை வார்த்தை என்பதை அறியாத இவர்கள் மற்றவர்களை பற்றி ஆக்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் செய்வதற்கு அருகதை அற்றவர்கள் என்பதாகவே கருததோன்றுகிறது.

இது சாதாரன ஒரு அறிவுள்ளவனும் விளங்கிகொள்ளக் கூடிய விசயம். இதை கூட விளங்காத இவர்கள் எல்லாம் மற்றவர்களை விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது.

*தனக்கு பீஜே அவர்கள் என்று போட்டுக்கொண்டு ரசாதிக்கு மட்டும் சைபுதீன் என்று மட்டும் போட்டது.

எவ்வளவு பெரிய கேள்வி நந்த பிரபஞ்சமே ஆடிடுதுளா?

Monday, 27 August 2012

thumbnail

பி.ஜே vs சைஃபுத்தீன்ரஷாதி விவாத ஒப்பந்தம் 101 தலைப்பு !!

Posted by NACHIKULAM TNTJ  | 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அன்புள்ள கொள்கை சகோதரர்களே! 
கடந்த காலங்களில் தவ்ஹீத் ஜமாஅத் பல விவாதத்தினை சந்தித்து விட்டு பல அமைப்புக்கள் மற்றும் நபர்களை ஓடவைத்த வரலாற்றை நாம் அறிவோம்.

இதில் சிலர் அழைப்புவிடுத்து வருவார்கள்... சிலர் ஓட்டமெடுப்பார்கள்...

அந்த வரிசையில் பல நாட்களாக நமது ஜமாஅத்தை விவாதத்திற்கு அழைத்துவிட்டு ஓட்டம் எடுத்தவரில் ஒருவரான சைஃபுத்தீன் அவர்களை நமது ஜமாஅத் கிளையான மரைக்காயர்பட்டடிணம் TNTJ கிளையின் முயற்சியால், அங்கு சைஃபுத்தீன் அவர்களின் விவாத அழைப்புக்கு நமது சகோதரர்கள் பதில் அளித்து சைஃபுத்தீனை விவாதத்திற்கு இழுத்துவந்து விட்டனர். பின்னர் கடிதங்கள் வழியாக பேசப்பட்டு கடந்த 26-08-2012 அன்று ஒப்பந்தம் போட இருந்த நிலையை நாம் அறிவோம்.

ஒப்பந்தம் எவ்வாறு அமைந்தது... வெளியில்  நடந்த சில ஃபித்னாக்களை அறிந்து கொள்வதற்காக இந்த கட்டுரை. ...

அன்று (26-08-2012) காலை 8.00 மணியளவில் பி.ஜே (ஜைனுல் ஆப்தீன்) மற்றும் அவருடன் ஏழு பேர்  (முகவை எஸ். சம்சுதீன், அப்பாஸ் அலி, கோவை ரஹ்மத்துல்லாஹ், செய்யது இப்ராஹீம்,  சுலைமான், அப்துன்நாசிர், கலீல ரசூல் ) கொண்ட குழு விவாத களத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அதேபோல் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய விவாத ஒப்பந்தம் 2.௦௦ மணி (மதிய நேரத்தை) கடந்தும் முடிவுக்கு வரவில்லை என்தாகவும் தகவல்கள் வந்தன.  பின்னர் இரவு 9.30 மணிக்கு முடிவடைந்ததையும் அறிய முடிந்தது. 

இதில் மொத்தம் தலைப்புகள் 101வரை இருப்பதாக தெரிகிறது. மாதம் ஒரு தலைப்பு என ஜனவரி 25 துவங்குவதாக அறிய முடிந்தது. முதல் தலைப்பு இஜிமாஃ மார்க்கத்தின் ஆதாரமாகுமா? என்று ஒரு நாளைக்கும்   பொய்யன் யார்? என்ற தலைப்பில் இரண்டு நாட்களும் திருச்சியில் விவாதம் 25 ஜனவரி முதல் பிப்ரவரி 15க்குள் நடத்த இருப்பதாக தெரிகிறது.

( சைஃபுத்தீன் தான் இந்த 101னை தேர்வு செய்திப்பாரே! கானிக்கை மாறி தெரிகிறது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.)

இதற்கிடையே.. காலையில் நடத்தப்பட்ட ஃபித்னாக்கள் குறித்து சில பார்வை....

கலீல் பாக்கவி என்ற சைஃபுத்தீன் (குஞ்சி) ஆதரவாளர் பரப்பிய வதந்தி உங்கள் பார்வைக்கு..




இறைவனின் திருப்பெயரால்...

மரிக்கா பட்டிணம் ஒப்பந்தத்திற்கு வராமல் பி.ஜே (ஜைனுல் ஆப்தீன்) தப்பி ஓட்டம் !

ஷைஃபுத்தீன் ரஷாதியும் மரிக்கா பட்டிணம் ஜமாத்தார்கள் கொண்ட குழுவும், TNTJ ( பி.ஜே குழுவும்) மரிக்கா பட்டினத்தில் நடக்கவிருந்த ஒப்பந்தத்திற்கு மரிக்கா பட்டிணம் TNTJ குழுவின் உறுப்பினர் ஹபீப் ராஜா என்பவர் ராமேஸ்வரம் DSP (துணை சப் இன்ஸ்பெக்டர்) அவர்களிடம் ஒப்பந்த நிகழ்வை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது ஏன் ?

உண்மையும் பொய்யும் தெளிவு பெற்று மக்கள் மன்றத்தில் தலைகுனிய நேரிடுமோ? தலை குனிந்தால் 25 வருட குழப்பம் இன்ஷால்லாஹ் (InshaAllah) முடிவுக்கு வரும் என்ற மக்களின் நம்பிக்கை ஏமாற்றம் தானோ? பி.ஜே வர தயாரா?
பலமுறை ஷைஃபுத்தீன் ரஷாதி நான் வருகிறேன் பி.ஜே (ஜைனுல் ஆப்தீன்) வர வேண்டும் என்ற 5 கடிதங்களில் குறிப்பிட்ட பிறகும் பி.ஜே (ஜைனுல் ஆப்தீன்) வருகிறேன் என சொல்லி வராமல், களத்தில் ஷைஃபுத்தீன் நிற்க பி.ஜே (ஜைனுல் ஆப்தீன்) இல்லாமல் லுஹா வந்தது ஏன்?

லுஹாவை ஷைஃபுத்தீன் ரஷாதி அழைக்கவே இல்லை, அழைக்காத லுஹா விற்கும் ஷைஃபுத்தீன் ரஷாதி க்கும் என்ன வேலை ஒப்பந்தத்தில்?
பேச்சுவார்த்தையே ஷைஃபுத்தீனுக்கும் பி.ஜே (ஜைனுல் ஆப்தீனுக்கும்) என பல கடிதங்களில் குறிப்பிட்ட பிறகு, பெயர் பலகையில் இல்லாத லுஹா விற்கு என்ன வேலை.....

அல்லாஹ்வின் அடிமை
முகவை முஸ்லிம்கள்.

-dearjifree
dearjifree@gmail.com

கலீல் அவர்களில் மெயிலை முகவை முஸ்லிம் என்பவர் பரப்பவும்... அவருக்கு பின்னர் உன்மைகள் தெரியவரவும்....

Khaleel Baaqavee, K-Tic abkaleel@yahoo.com
16:02 (1 hour ago)

to k-tic-group

from abkaleel@yahoo.com
அன்புள்ள சகோரதரர்களே!

இன்று (26-08-2012) காலை 8.00 மணியளவில் பி.ஜே (ஜைனுல் ஆப்தீன்) விவாத களத்தில் இறங்கிவிட்டார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேபோல் இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய விவாத ஒப்பந்தம் ௨.௦௦ மணி (மதிய நேரத்தை) கடந்தும் முடிவுக்கு வரவில்லை என்பதையும் சேர்த்து பகிர்ந்துகொள்கிறோம்...

இப்படிக்கு
முகவை முஸ்லிம்கள்...

இதற்கிடையே.. கலீல் அவர்களுக்கு மற்றும் ஒரு சகோதரர் அனுப்பிய மெயில்...


அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

அன்புள்ள சகோதரர் கலீல் பாக்கவி அவர்களுக்கு, கீழக்கர
ை நசீருதீன் எழுதுவது,

தங்களின் வலையதளம், காலையில் பார்த்தேன்.

சில சகோதரர்கள் பி.ஜே அவர்கள் விவாதத்தில் இருந்து ஓட்டம் எடுத்து விட்டு சம்சுல்லுஹா அவர்களை அனுப்பியதாக வதந்தியை, பொய்யை பரப்பி விட்டார்கள். கேள்விப்பட்டதை எல்லாம் பரப்பியவனுக்கு அல்லா என்ன தண்டனை கொடுப்பான் என்பது தங்களைப் போன்ற மார்க்க விளக்கமளிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

நான்கூட கலையில் இது விசயமாக மெயில் அனுபினேன். ஆனால் தாங்கள் ஒரு தலை பட்சமாக வலைதளம் வழியாக அதை அனுப்பாமல் இருந்து விட்டர்கள்.

மேலும் தங்கள் மூலமாக பல சகோதரர்கள் அனுப்பும் செய்தியை பாரபட்சமின்றி வெளியிட கேட்டுக்கொள்கிறேன். இனியாவது தாங்கள் நாடு நிலையோடு செயல் படுவீர்கள் என்று நம்புகிரே.

மேலும், இந்த நிமிடம் வரை மரைக்காயர் பட்டினத்தில் பி.ஜே அவர்களும் சம்சுதீன் ரஷாதி அவர்களும் விவாத ஒப்பந்தம் விசயமாக விவாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தங்கள் இந்த வளைய தளம் மூலமாக வெளியிட வேண்டுகிறேன்.

பி.ஜே அவர்கள் ஒரு நாளும் மார்க்கம் விசயமாக விவாதத்திற்கு அழைத்தால்! ஓட்டம் எடுக்க மாட்டார், மாறாக ஓட்டம் எடுக்க வைப்பார் என்பது தங்களை போன்றவர்களுக்கு தெரியும்.

மேலும் இனி, சம்சுதீன் ரஷாதியை ஓட்டம் காண வைக்க வேண்டிய காலம் வரப்போகிறது இன்ஷா அல்லாஹ்.


துவா சலாம்

S.L.நசீருதீன்

கீழக்கரை


இப்புகைப்படம் மரைக்காயர்பட்டிணத்தின் கிளை மர்கஸ்காக உள்ள இடத்தை பார்வையிட்டபோது எடுக்கப்பட்டது.


என்ன வதந்திகள் வந்தாலும்... கொள்வாதிகளுக்கு இது என்ன புதியதாக ? என்பதை போல பல சகோதரர்கள் பதிலுக்கு பதில் கொடுக்க தயங்கவில்லை... 

இன்ஷா அல்லாஹ்... விரைவில் விவாத களத்தில் அசத்திய வாதிகளை சந்திக்க தாயாரா இருக்கிறார் பி.ஜே.  அவரது உடல்நலத்திற்கு துஆ செய்யவும்.

'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது' என்றும் கூறுவீராக! அல்குர்ஆன் 17-81.

Wednesday, 22 August 2012

thumbnail

ஃபித்ரா வினியோகம் - 2012

Posted by NACHIKULAM TNTJ  | 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இந்த ஆண்டும்  (2012) அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் (ஃபித்ரா) நோன்பு பெருநாள் தர்மத்தை வசூலித்து, சிறப்பாக வினியோகம் செய்யப்பட்டது..


வரவுகள்- உள்ளூர் மற்றும் வெளிநாடுகள்- 49,840,00
மாவட்டம்- _                                                                 5,000 00
மொத்தம்-                                                                    54,840,00

செலவுகள்- பணம்மாக கொடுத்தது- 6,660,00
அரிசி 9 மூட்டை 225 கிலோ-                  7,920,64
கறி 84 கிலோ-                                            30,660,00
ஆயில் ½ லிட்டர் வீதம் 224பாக்கெட்- 9,604,00
மொத்தம்-                                                     54,844,64


வினியோகம் செய்த விபரம்:-
ரூ70.72யை வீதம் 112 நபருக்கு 2 கிலோ அரிசி                                   -7,920,64
ரூ85.75யை வீதம் 112 நபருக்கு 1/2லிட்டர் எண்ணை 2 பாக்கெட்- 9,604,00
ரூ273.75யை வீதம் 112 நபருக்கு 3/4கிலோ கறி                                   30,660,00

பணம்மாக குடுத்தது:-
ரூ,1000 வீதம் 1 நபருக்கு- 1000/-
ரூ,580 வீதம் 2 நபருக்கு-  1160/-
ரூ,500 வீதம் 9 நபருக்கு-  4500

மொத்த வரவு-      54,840,00
மொத்த செலவு-  54,844,64
கூடுதல் செலவு-          4.64 காசு



thumbnail

ஈகை பெருநாள் தொழுகை - 2012

Posted by NACHIKULAM TNTJ  | 



 TNTJ நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த நோன்பு பெருநாள் அன்று நடுத்தெரு, மரைக்காயர் திடலில் சரியாக 7.30 மணியளவில் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. 






இதில் மாநில பேச்சாளர் மனாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். ஏறாலமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டர். தொழுகையில் கலந்து கொண்டவர்களில் ஒருபகுதியினர்...




Saturday, 18 August 2012

thumbnail

இஸ்லாமிய பண்டிகை கொண்டாட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 


Thursday, 16 August 2012

thumbnail

ரமளான் - நோன்பு கஞ்சி வினியோகம்

Posted by NACHIKULAM TNTJ  | 

N
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரமளான் நாட்கள் முழுவதும் நோன்பு கஞ்சி வினியோகம் நடைபெற்று வருகிறது...


thumbnail

ரமளான் இரவு தொழுகை

Posted by NACHIKULAM TNTJ  | 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரமளான் கடைசி பத்து நாட்கள் இரவு தொழுகை மற்றுத் சஹர் உணவுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்...









thumbnail

இஃப்தார் நிகழ்ச்சி - தவ்ஹீத் பள்ளியில்...

Posted by NACHIKULAM TNTJ  | 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - நாச்சிகுளம் கிளை சார்பாக ரமளான் முழுவதும் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில..

thumbnail

மழை தொழுகை - நாச்சிகுளத்தில்...

Posted by NACHIKULAM TNTJ  | 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

நாச்சிகுளம் TNTJ கிளையின் சார்பாக மழை வேண்டி கடந்த 07-08-2012 செய்வாய் கிழமை அன்று மழைதொழுகை நடைபெற்றது. இதில் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

Saturday, 11 August 2012

thumbnail

மரண அறிவிப்பு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம், நடுத்தெருவை சார்ந்த அஜிமத் அலி, செல்லப்பா அவர்களின் தம்பி சேட் அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் மரணமடைந்தார்கள்.

ஜனாஷா தொழுகை நேரம் இன்று மாலை 3.00 மணியளவில் நடைபெறும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.

Friday, 10 August 2012

thumbnail

நோன்பு பெருநாள் தர்மம் (ஃபித்ரா )

Posted by NACHIKULAM TNTJ  | 

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) , நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட் டுள்ளது.

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.
கொடுக்கும் நேரம்

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.
ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.
எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப் பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது

    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top