நாச்சிகுளம் கிளையின் சார்பாக இந்த 2012ம் ஆண்டும் ஹஜ் கூட்டுக் குர்பானி சிறப்பாக வசூலிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டது.
9 மாடுகள் மற்றும் 24 ஆடுகள் குர்பானியாக கொடுக்கப்பட்டது.
மொத்த குர்பானியின் பங்கு = 69.
மொத்த வினியோகம் செய்யப்பட்ட குடும்பங்கள் = 385.
அல்ஹம்துலில்லாஹ்...
28-10-2012 அன்று நாச்சிகுளம் கிளையின் ஆலோசனைக் கூட்டம் MKS நைனாமுகம்மது தலைமையில் கிளை தலைவர் முன்னிலையில் லுஹர் தொழுகைக்குப் பின் நடைபெற்றது. இதில் கிளையின் வளர்ச்சி பணிகள் மற்றும் பள்ளியின் கட்டிட பனிகள் குறித்து விரிவாக அலசப்பட்டது.
எதிர்வரும் நோன்பிற்குள் பள்ளியின் கட்டிடப்பனிகளை முடிக்க கிளை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
சகோதரர்கள் அனைவரும் தங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. காலை சரியாக 7 மணியளவில், மழையின் காரணமாக மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிலேயே தொழுகை நடைபெற்றது. பள்ளியின் இமாம் ஆரிஃப் அவர்கள் தொழுகை நடத்தினார்.இதில் ஆண்களும் பெண்களும் 150க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..
புதிதாக மேலே கட்டப்பட்ட தளத்தில் ஆண்களுக்கான தொழுகை நடைபெற்றது.
முதல் மாடியின் இடது (Right) புறத்தில் இமாம் தொழுகை நடத்துகையில்...
இன்ஷா அல்லாஹ்... நாளை 27-10-2012 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நமது ஜமாஅத் சார்பாக நடுத்தெரு, மரைகாயர் திடலில் சரியாக காலை 7 மணியளவில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது கிளை சார்பாக கடந்த 24-10-2012 அன்று மாணவர்களுக்கான ஒழுக்கப் பயிற்சி முகாம் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. முகாமை பள்ளியின் இமாம் ஆரிஃப் அவர்கள் நடத்தினார்.
இதில் 45க்கும் மேற்ப்பட்ட மாணவர, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துரில்லாஹ்...
நாச்சிகுளம் கிளையின் சார்பாக மாற்றுமத சகோதரருக்கு மழையால் பாதிக்கப்பட்டவர் சகோதரரான சீனிவாசன் ஆதமுத்து (ஊனமுற்றோர் மாற்று மதசகோதரர்) நமது ஜமாஅத்திற்கு மனு அளித்ததை தொடர்ந்து, நமது ஜமாஅத் அவரது வீட்டை ஆய்வு செய்து மேற்க்கண்ட சகோதரருக்கு 23-10-2012 அன்று மழையால் பாதிக்கப்பட்ட வீட்டை சரி செய்ய ரூபாய் 1700 மதிப்புள்ள 5 மூட்டை சிமெண்ட், நமது ஜமாஅத் சார்பாக வழங்கப்பட்டது.
மேற்க்கண்ட சகோதரருடைய மகளுக்கு பிரசவத்தின் போது அறுவை சிகிச்சைகாக இரத்தம் தேவை ஏற்ப்பட்ட போது நமது ஜமாஅத் உதவ முன்வந்து, பின் இரத்தம் தேவை ஏற்ப்படாததால் அன்று நமது ஜமாஅத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டார். இன்று மழையால் பாதிக்கப்பட்டு அவருக்காக நமது ஜமாஅத உதவியுள்ளது குறிப்பிடதக்கது.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 22-10-2012 அன்று முஸ்லிம்களுக்கான தாவா (அழைப்பு) பனியில் மொம்தாஜ் அலி அவர்கள் தலைமையில் நாச்சிகுளம் பகுதியில் இஷா தொழுகைக்கு பிறகு அழைப்பு பனி நடைபெற்றது. அல்ஹம்துரில்லாஹ்...
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய youtube-பை புறக்கணிக்கும் விதமாக நமது தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீடியோ இணையதளம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துரில்லாஹ்...
நாச்சிகுளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 14-10-2012 அன்று நாச்சிகுளம் கடை வீதியில் சமுகத்தீமைகள் என்ற தலைப்பில் நாச்சிகுளம் இப்ராஹீத் பள்ளி (தவ்ஹீத் பள்ளி) இமாம் ஆரிஃப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில் மது, சிகரட் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்கள் இதை ஆர்வத்துடன் கேட்டனர்.
நமது ஜமாஅத் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியின் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால்.. கிளையில் நடைபெறும் தாவா பணிகள் குறித்த செய்தியை வெளியிட முடியவில்லை.
இன்ஷா அல்லாஹ்.. விரைவில் கிளையில் நடைபெறும் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படும். அத்துடன் பள்ளியின் தற்போதைய பணிகள் குறித்த புகைப்படங்களுடன் செய்தி விரைவில் எதிர்பாருங்கள்...
இன்ஷா அல்லாஹ்...
பள்ளிக்காக தங்களால் முடிந்த பொருளாதார உதவியை வாரி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக அமைந்துள்ளது. இதனால்தான் வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.
ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம் சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத்தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.
மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு ரூபாய் 9,000 முதல் 10,000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 10,500 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் ரூபாய் 10,500 அனுப்பி வைக்குமாறும், ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1500 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
நடுத்தரமான ஆட்டின் விலை மற்றும் அதற்கான கூலி சேர்த்து ரூபாய் 7000 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் வாழும் பகுதி மக்களுக்காக ஒரு ஆடு வழங்க விரும்புவோர் 7000 அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விலையாவும் உத்தேசமானது தான். நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஆடு மாடுகள் வாங்கி ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் வினியோகம் செய்யப்படும். இயன்றவரை நீங்கள் வழங்கும் தொகைக்கே (கூலியைக் கழித்து) பிராணிகள் வாங்கப்படும்.
அந்த விலையில் ஆடுமாடுகள் கிடைக்காத பட்சத்தில் அதைவிட சற்றே குறைந்த விலையில் ஆடு மாடுகள் வாங்கப்படும்.
உங்களால் அனுப்பப்பட்ட ரூபாய் 10,500 விலையில் மாடு கிடைக்காமல் 9500க்கு கிடைத்தால் இந்த வகையில் மிச்சமாகும் தொகை முஸ்லிம் அல்லாத நண்பர்கள் கேட்கும்போது இலவச குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வகைக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இதற்கு உடன்படும் அன்பர்கள் குர்பானிக்கான தொகைகளை அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.