இன்ற உலகில் இயற்கை சீற்றங்கள் என்பது அதிகரித்த வன்னமே உள்ளது. நாம் வாழும் வாழ்வில் இயற்கைக்கும் பின்னால் ஒரு சக்தி (இறைவன்) இருக்கிறான் என்பதை நாம் அனைவரும் அறிந்தவையே. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவை தாக்கிய சாண்டியாக இருந்தாலும் சரி, தமிழகத்தை தாக்கிய தானே, நீலமாக இருந்தாலும்... இவற்றுக்குப் பின் உள்ள இறைவனின் சக்தியே என்பதை நாம் அறிவோம். இவைகள் ஏற்ப்பட காரணம் என்ன? இது போன்ற சீற்றங்களில் இறைநம்பிக்கையாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா? என்ற கேள்விகள் நம் மத்தியில் எலலாம்.
ஓரிக் கொள்கை மறுப்பு, விபச்சாரம், அளவு மோசடி,துரோகம், ஓரினச் சேர்க்கை, லஞ்சம், நீதியின்மை, தீவிரவாதம்,அமானித மோசடி, கொலை, கொள்ளை, வரதட்சனை, பொய்,பித்தலாட்டம் இதுப் போன்ற ஏராளமான செயல்களை மனிதநேயத்திற்கும் மனிதனுக்கும் இந்த சமுதாயம் செய்துவருகிறது.
முந்தைய வரலாற்றில் படிப்பினை
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ 7:85
மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபைஅனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்!உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற் குரியவன் வேறுயாருமில்லை. உங்கள் இறைனிடமிருந்து உங்களிடம் சான்றுவந்துள்ளது. எனவே அளவையும், நிறுவையையும்நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக்குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! நீங்கள் நம்பிக்கைகொண்டிருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது'' என்று அவர்கூறினார்.
فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ (91) الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَأَنْ لَمْ يَغْنَوْا فِيهَا الَّذِينَ كَذَّبُوا شُعَيْبًا كَانُوا هُمُ الْخَاسِرِينَ (7:92)
உடனே அவர்களைப் பூகம்பம் தாக்கியது. காலையில் தமதுவீடுகளில் வீழ்ந்து கிடந்தனர். ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோர்(அதற்கு முன்) அங்கே வசிக்காதவர்களைப் போலானார்கள்.ஷுஐபைப் பொய்யரெனக் கருதியோரே இழப்பைஅடைந்தோரானார்கள்.
ஓரினச் சேர்க்கை ஈடுபட்டார்கள்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ (80) إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ (7:81)
"நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம்செல்கிறீர்கள்! நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்'' (என்றும் கூறினார்.) இவர்களை உங்கள் ஊரை விட்டுவெளியேற்றுங்கள்! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்''என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.
فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ (82) مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ (11:83)
நமது கட்டளை வந்த போது, சுடப்பட்ட கற்களால் அவ்வூரின்மீது கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியைக் கீழ்ப்பகுதியாக்கினோம். (அவை) உமது இறைவனிடம்அடையாளமிடப்பட்டது. அவ்வூர் (இந்த) அநீதி இழைத்தோருக்குத்தொலைவில் இல்லை.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6) إِرَمَ ذَاتِ الْعِمَادِ (7) الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ (8) وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ (9) وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10) الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11) فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ (12) فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ (89:13)
ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமதுஇறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூதுசமுதாயத் தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படிஆக்கினான்?) அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள். எனவே உமது இறைவன்வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ هُوَ أَشَدُّ مِنْهُمْ قُوَّةً وَكَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ (15) فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِي أَيَّامٍ نَحِسَاتٍ لِنُذِيقَهُمْ عَذَابَ الْخِزْيِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَلَعَذَابُ الْآخِرَةِ أَخْزَى وَهُمْ لَا يُنْصَرُونَ (41:16)
ஆது சமுதாயம் பூமியில் நியாயமின்றி ஆணவம்கொண்டனர். "எங்களை விட வலிமை மிக்கவர் யார்?'' எனக்கேட்டனர். அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விடவலிமையானவன் என்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள்நமது சான்றுகளை மறுப்போராக இருந்தனர். எனவே இவ்வுலகவாழ்க்கையிலேயே இழிந்த வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச்செய்வதற்காக கெட்ட நாட்களில் அவர்கள் மீது கடும் புயல் காற்றைஅனுப்பினோம். மறுமையின் வேதனை (இதை விட) மிகவும்இழிவுபடுத்தக் கூடியது. அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால்அழிக்கப்பட்டனர். ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யானகொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அதை ஏழு இரவுகளும், எட்டுபகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான்.அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப்போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர். அவர்களில் எஞ்சியோரை நீர்காண்கிறீரா?
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (28:4)
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில்உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப்பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக்கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம்செய்பவனாக இருந்தான்.
என்னை தவிர வேற இறைவன் இல்லை
وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي (28:38)
"பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளைநான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே!எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர்பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.
فَحَشَرَ فَنَادَى (23) فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى (79:24)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
கடலில் மூழ்கடிக்கப்பட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)10
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும்போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிரவணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான்முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாகஇருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காகஉன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்செய்வோராகவே உள்ளனர்.
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (17:32)
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும்,தீய வழியாகவும் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதுப்போன்ற அழிவு ஏன்ஏற்படவில்லை?
18 أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك * رواه البخاري
பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபாஉடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில்ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள்கூறியதாவது:
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச்சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க,"அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள்என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட் டீர்கள்என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்,நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள்என்றும், எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள்என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்தஉறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரியநற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில்(மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து,அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால்அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில்ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை(உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின்பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத்தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்றசொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்)அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
7056 عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةً عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنْ اللَّهِ فِيهِ بُرْهَانٌ * رواه البخاري
"நாங்கள் உற்சாகமாயிருக்கும்போதும்சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும்சிரமத்திலிருக்கும்போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமைவழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச்செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்;ஆட்சியதிகாரத்தி-ருப்பவர் களுடன் நாங்கள்சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்புஎன்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம்கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள்கண்டாலே தவிர'' என்று எங்கüடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழிவாங்கியதும் அவர்கள் எங்கüடம் பெற்ற பிரமாணங்கüல் அடங்கும்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ 60:12
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள்உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில்உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழிகொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காகஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ்மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
மனிதனுக்கு இரக்கம் காட்ட வேண்டும்
7376 عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ * رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ்கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
13 أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ * رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம்சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கைகொண்டவர் ஆக மாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4578 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ * رواه مسلم
தீமை பெருகி விட்டால் நல்லவர்கள் அழிக்கப்படுவார்கள்
3346 قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ * رواه البخاري
நான் "அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள்இருக்க, நாம் அழிந்து விடுவோமா'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "ஆம்; தீமை பெருகிவிட்டால்...'' என்றுபதிலüத்தார்கள்.
நன்றி - ராஜ்முகம்மது, Misc.