நாச்சிகுளம் வாழ் அமீரக கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று ஒருங்கினைப்பு கூட்டம் துபாய் ஹோரலன்ஸ் மர்கஸில் அஷர் தொழுகைக்கு பிறகு மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் துபாய் மண்டல செயலாளர் அஸ்ரப் அலி முன்னிலையில் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் தலைமைலும் நடைபெற்றது.
இதில் நாச்சிகுளத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக தௌஹீத் பள்ளி இமாம் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “இறை நம்பிக்கையாளனின் பண்புகள்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.
இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.







