நாச்சிகுளம் கிளையில் 25/01/13 அன்று ஜும்மாவிற்க்கு பிறகு கிளையின் ஆலோசனைக்கூட்டம் கிளை தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை கிளைகளில் நடைபெற இருக்கும் இரத்ததான முகாம்மில் கலந்துக்கொள்வது சம்மந்தம்மாகவும், மாநில உணர்வு பொறுப்பளர் சேக்தாவூத் அவர்கள் உடல்நிலைக்குறைவாக இருப்பதால் அவரை திருச்சி சென்று நலம் விசாரித்து வருவது சம்பந்தம்மாக இம்மஷூராவில் ஆலோசிக்கப்பட்டது.
நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 24/01/2013 அன்று மாலை நாச்சிகுளம் ஊராட்சி மன்றத்தில் மாவட்ட சட்டப்பணிக்குழு முகாம் நடைப்பெற்றது.
அதில் வட்டாச்சியர் மற்றும் மாவட்ட தலைமை நீதிபதி இன்னும் ஏராலமான அரசு அதிகாரிகள் கழந்துக்கொண்டனர். அதில் ஏழை முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதந்தோரும் ரூபாய் 1000, அரசு வழங்கி வருகிறது.
இத்தொகையை பெற நாச்சிகுளம் ஊர் மக்கள் பயன் பெரும் விதத்தில் தமிழாடு தவ்ஹீத் ஜமாத் நாச்சிகுளம் கிளை அதற்க்கு உண்டான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மொத்தம் 14 முதியோர் மற்றும் விதவைகளை அந்த முகாம்க்கு அழத்து சென்று நேரடியாக மனு கொடுக்கப்பட்டன. அதை ஆய்வு செய்த அதிகாரிகள் வரும் மாதத்தில் இருந்து இவர்களுக்கு ரூ1000 கிடைக்கும் என்று உறுதிக்கூறினார்.
நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 20/01/2013 அன்று கடியாச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இரண்டு வேன்களில்ஆண்கள் 21, பெண்கள் 24, மொத்தம் 45 நபர்களை பொதுக் கூட்டத்துக்கு அழைத்துசெல்லப்பட்டது.
09/01/2013 அன்று நாச்சிகுளம் கிளை தலைவர் ஹாஜாமைதீன் அவர்கள் நாச்சிகுளத்தை சார்ந்த சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ஜக்காத் நிதியில் இருந்து ரூபாய் 7,000/- மதிப்புள்ள வெல்டிங் சாதனங்கள் வழங்கப்பட்டது!
நாச்சிகுளம் கிளையின் சார்பில் 4-1-2013 அன்று நாச்சிகுளம் கிராம நிர்வாக அதிகாரி (VAO) அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா செய்து அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” மற்றும் கூடுதலாக நான்கு தலைப்பை கொண்ட புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது .