நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 26/03/2013 அன்று மஸ்ஜித் இப்ராஹீத் பள்ளியில் இஷாவுக்கு பின் சகோ. Kஅமீன் அவர்கள் பாவமண்ணிப்பு துவா என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 25-3-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் K.அமீன் அவர்கள் இணைவைப்பை பற்றிய மார்க்க உரையாற்றினார். இதில் பல சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 24-3-2013 அன்று 8 மணிக்கு தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட தலைவர் அப்துல்ரஹ்மான் முன்னிலையில் நாச்சிகுளம் கிளை தலைவர் ஹாஜாமைதீன் மற்றும் சங்கேந்தி பொறுப்பாளர் அஜீத்கான் தலைமையில் நாச்சிகுளம் கிளை அடுத்த கிராமம் சங்கேந்தியில் இன்னும் ஒருவார காலத்தில் மர்க்கஸ் கட்டுமான பனி துவங்குவது என்ற தீர்மானம் போடப்பட்டது. அல்ஹம்துரில்லாஹ்..
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 24/03/2013 அன்று காலை 10 மணிக்கு நாச்சிகுளம் அடுத்த கிராமமான இடையூர்-சங்கேந்தி கிராமத்தில் அங்குள்ள மாணவர்களை ஒருங்கினைத்து கல்வி சம்பந்தம்மாக தர்பியா முகாம் நடத்தப்பட்டது.
இதில் அப்துல் ஹமீது மஹளரி அவர்கள் பயிற்சி அளித்தார்கள். இதில் 20க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டர்.
நாச்சிகுளம் கிளையின் சார்பில் கடந்த 21-3-2013 இன்று பிறசமுதாயத்தை சேர்ந்த சகோதரர் வீரமணி என்ற ஒருவர் தானாக முன்வந்து தாம் இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுவதாக கூறியதையடுத்து,
அவருக்கு கடவுள் கொள்கை பற்றி தாவா செய்து, மேலும் அவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம், போன்ற நான்கு தலைப்பை கொண்ட புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து தாவா செய்யப்பட்டது.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 20/03/2013 அன்று நாச்சிகுளம் கிளையில் இருந்து அருகில் உள்ள இடையூர்-சங்கேந்தி கிராமத்திற்கு சென்று அங்குள்ள பொறுப்பாளர்களை ஒருங்கினைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 24/03/2013 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு நடக்க விருக்கும் மாணவர் தர்பியா சம்பந்தம்மாக ஆலோசனைகள் செய்யப்பட்டு, அதை தொடர்ந்து அக்கிளை பொறுப்பாளர்கலுக்கு தாவா சம்பந்தம்மான புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ஜஷாகல்லாஹ்...
நாச்சிகுளம் கிளையின் சார்பில் கடந்த 18/03/2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பக்கத்து கிராமமான இடையூர்-சங்கேந்தி சென்று அங்குள்ள சகோதரர்களை சந்தித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.
நாச்சிகுளம் கிளை சார்பில் கடந்த 15/03/2103 வெள்ளிகிழமை மஸ்ஜிது இப்ராஹீம் பள்ளியின் ஜும்ஆ வாலிவசூல் மொத்த வசூல் ரூ,3500/- தொகையையும் கோவை மாவட்டம் கரும்புகடை மஸ்ஜிதுல் முபீன் கட்டிட பணிக்காக வழங்கப்பட்டது.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 13-3-2013 அன்ற மாணவர்களுக்கான குர்ஆன் சிறப்பு பயிற்சியாக விளக்கங்கள் எவ்வாறு அறிவது என்று மாணவர்களுக்கு இஷாவுக்கு பின் கற்றுக்கொடுக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 10/03/2013 அன்று சகோதரர் அமீன் அவர்கள் இஷாவுக்கு பின் இலங்கையில் நடப்பது மட்டும் இனப்படுக் கொழை இல்லை! என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 12-3-2013 அன்று கிளை தலைவர் முன்னிலையில் மஃரிப் தொழுகைக்கு பின் மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளியில் கிளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் நாச்சிகுளம் அருகாமையில் உள்ள ஊர்களில் தாவா மற்றும் கிளைகளை அமைப்பது குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.