இன்ஷா அல்லாஹ்... மிக விரைவில் வட்டி இல்லா கடன் புது வடிவில் அனைத்து மக்களும் பயனடையும் வகையில்...|...ஆன்லைன் TNTJ webtv தினமும் நான்கு தலைப்புகளில் 24 மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது....| ...எடையூரில் தவ்ஹீத் மர்கஸ் அமைக்க தீர்மானம்...|..நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளிக்காக வாரி வழங்கிடுவீர்....

Live Tv

  • A boat with beautiful sunset.
  • Tree in field with blue sky.
  • Amaizing sunrise moment

Monday, 29 April 2013

thumbnail

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியருக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் அன்பளிப்பு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக 29-4-2013 இன்று திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் எதிர் தரப்பினருக்கு இடையேயான பிரச்சனைகள் குறித்த  பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, பின்னர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Sunday, 28 April 2013

thumbnail

நாச்சிகுளத்தில் சமரச பேச்சுவார்த்தை

Posted by NACHIKULAM TNTJ  | 





thumbnail

”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் அன்பளிப்பு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக 28-4-2013 இன்று மாற்றுமத சகோதரர் கிராம நிர்வாக அலுவலக எழுத்தாளர் உலகநாதன் அவர்களுக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


thumbnail

நாச்சிகுளத்தில் ஏகத்துவத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்; நடவடிக்கை எடுக்குமா காவல்துறை !

Posted by NACHIKULAM TNTJ  | 


திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக இன்று இரவு 27-4-2013 இஷா  தொழுகைக்கு பின் மார்க்க சொற்ப் பொழிவு நடைப்பெற்றது.

இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் ”கேலி கிண்டலும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சஹாபாக்கள் காலத்தில் அவர்களின் வாழ்வில் பட்ட அடி, உதைகள் என் பல்வேறுபட்ட செய்திகளை மக்களுக்கு எடுத்துறைத்து விளக்கினார்.

இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுக்கொள்கை கொண்ட சிலர் தம்மை விமர்சிப்பதாக கூறி பள்ளியில் உள்ளவர்களை தாக்க முன்றனர். இதே பேன்று கடந்த 24-4-2013 அன்று இதே போன்று வரதட்சனையை எதிர்த்து பேசியதற்காக தாக்கவந்தனர். இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்தது தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் காவல்துறை இரண்டு தரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இன்று நடந்த பிரச்சனையில் நமது சகோதரர் ஒருவரை முதுகில் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு மீண்டும் தெரியப்படுத்தப்பட்டு, காவல்துறை நாச்சிகுளம் வந்துள்ளது.

இன்று காலை 28-4-2013 முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் நாச்சிகுளம் கிளை நிர்வாகிகள் சென்று மனுகொடுக்கவுள்ளனர்.

இப்பிரச்சனையை மாநில தலைமை, மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்களை நியமித்துள்ளதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வுகாணவும் மாநில துணை பொது செயலாளர் யூசுப் அவர்களுக்கு அறிவுருத்தியுள்ளது.

நாளை நாச்சிகுளம் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் எதிர்தரப்பினரை அழைத்து சுமுகதீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


Thursday, 25 April 2013

thumbnail

வரதட்சனையை எதிர்த்து பயான்; இமாமை தாக்க வந்தவர் மீது வழக்கு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று தவ்ஹீத் பள்ளியில் மார்க்க சொற்ச் பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஷ

இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் அனாச்சாரங்களையும், வரதட்சனை என்ற கொடுமையையும் பற்றி விரிவாக விளக்கினார். 

 இதை கேட்ட மாற்றுக்கொள்கை கொண்ட ஒருவர் (24-4-2013 அன்று) தவ்ஹீத் பள்ளியில் புகுந்து இமாமை தாக்க முன்றார். அது தொழுகை நேரமாக இருந்ததால் கிளை சகோதரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் நமது கொள்கை சகோதரர்களின் வார்த்தைகளை கேட்காமல், அடிக்க முயற்தற்காக அவர் மீது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 24-4-2013 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக வழங்கு பதிய தீர்மாணிக்கப்பட்டு முடிவேடுக்கப்பட்டது. காவல்துறை அவர்மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். (இன்ஷா அல்லாஹ்...)


thumbnail

தனி நபர் தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 22-4-2013 அன்று காலை தொழுகை அழைப்பு பணி இமாம் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.


thumbnail

மார்க்க சொற்ச் பொழிவு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 21-4-2013 அன்று தவ்ஹீத் பள்ளியில் மார்க்க சொற்ச் பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமீன் அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.


thumbnail

மாற்றுமத சகோதரருக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 16-4-2013 அன்று தவ்ஹீத் பள்ளயில் சிலை வணக்கத்திற்கு எதிரான பயான் நடைபெற்றது. 

 இதை கேட்டுக்கொண்டிருந்த மாற்றுமத சகோதரர் ஒருவர் எங்கள் கடவுளை இழிவுபடுத்துவதாக கூறியதை அடுத்து, அச்சகோதரின் கேள்விக்கு பதில் தந்து மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், வருமுன் வுரைத்த இஸ்லாம் என நான்கு தலைப்பில் புத்தகங்கள் கொடுத்து தவ்ஹீத் பள்ளி இமாம் அப்துல்லாஹ் தலைமையில் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


thumbnail

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 16.04.2013 இஷா விற்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் சகோ. அப்துல்லாஹ் அவர்களால் பேரழிவுகள் தரும் படிப்பினைகள் என்ற தலைப்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி பயான் நடைபெற்றது.


thumbnail

தனி நபர் தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 16.04.2013 அன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு தொழுகை சம்பந்தமாக தனி நபர் தாவா தவ்ஹீத் பள்ளி இமாம் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


thumbnail

மார்க்கச் சொற்ச்பொழிவு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 15.04.2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தவ்ஹீத் பள்ளியில் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி இமாம் சகோ. அப்துல்லாஹ் அவர்களால் சிறப்புரையாற்றினார்கள்.


thumbnail

மக்தப் சிறப்பு வகுப்பு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 16-4-2013 அன்று தவ்ஹீத் பள்ளயில் மக்தப் வகுப்பு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பெண்களுக்கு தனியாக பெண்கள் மதரஷாவிலும் நடைபெறுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.


thumbnail

தனி நபர் தாவா

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 13.04.2013 அன்று சுபுஹு தொழுகைக்கு பிறகு தொழுகை சம்பந்தமாக தனி நபர் தாவா தவ்ஹீத் பள்ளி இமாம் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.


thumbnail

நபி வழி திருமணம்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 15.04.2013 அன்று பகல் 12 மணிக்கு நபி வழி திருமணம் நடைபெற்றது. நாச்சிகுளம் E.பகுருதீன் அவர்கள் மகன் E.B.பாரூக் அவர்கள் நிக்காஹ் நபிவழி அடிப்படையில் கிளை நிர்வாகிகள் முன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் .


Friday, 12 April 2013

thumbnail

துபை -நாச்சிகுளம் கிளை ஆலோசனைக் கூட்டம்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் அமீரக ஒருங்கினைப்பின் மாதாந்திர அமர்வு  ஷார்ஜாவில் சுற்றுலா தளமாக இருக்க கூடிய குர்பாகனில் 12.04.2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாச்சிகுளம் அமீரக ஒருங்கினைப்பின் மாதாந்திர அமர்வு இதில் M.KS. நெய்னா மு...ஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்றது . இதில் சகோ.நாச்சிகுளம் ராஷிக் அலி அவர்கள் “நாம் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பின்னர் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு. இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.





Wednesday, 10 April 2013

thumbnail

மரண அறிவிப்பு (9-4-2013)

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம், மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகனும், ரசீது அவர்களின் சகோதரரும் மற்றும் தாஹீர் அவர்களின் மைதுனருமான (பண்டாரி) ஜஹபர் அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்கள்.

ஜனாஷா தொழுகை நேரம்  பின்னர் அறிவிக்கப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்.

Tuesday, 9 April 2013

thumbnail

மார்க்க சொற்பொழிவு

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளையி சார்பாக கடந்த 8/04/2013 அன்று இஷாவுக்கு பிறகு சகோதரர் தாஹி அப்துல்லாஹ் அவர்கள் அர்ஸின் நிழல் யார்? யாருக்கு? என்ற தலைப்பில் உறை நிகழ்தினார்.


Monday, 8 April 2013

thumbnail

துளசியாப்பட்டினம் பொதுக்கூட்டத்தில்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 5/04/13 அன்று துளசியாப்பட்டினம் மார்க்க விளக்க பொதுக்கூட்டத்துக்கு கிளை சார்பாக இரண்டு வேன் 20 ஆண்கள் 20 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டது.



thumbnail

துளசியாப்பட்டிணம் பொதுக்கூட்டம் நோட்டிஸ்

Posted by NACHIKULAM TNTJ  | 

நாச்சிகுளம் கிளை சார்பாக  29/03/13 இன்று தவ்ஹீத் பள்ளியில் ஜும்ஆவுக்கு பின், எதிர் வரும் 05/04/13 அன்று நாகை மாவட்டம் துளசியாப்படிணத்தில் சகோதரர் அல்தாபி சிறப்புரையில் மார்க்க விளக்கபொதுக்கூட்டம் நடைபெற இருப்பதை மக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்து, அழைப்பு விடுக்கப்பட்டது.



Sunday, 7 April 2013

thumbnail

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

Posted by NACHIKULAM TNTJ  | 


திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 28/03/2013 இன்று முத்துபேட்டை TO நாகை ECR சாலையில் நாச்சிகுளம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் கேரளாவில் இருந்து வந்த வாகனம் செல்லுகையில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவற்றில் மோதி விபத்துகுள்ளானது.

இதை அடுத்து தகவல் அறிந்த நாச்சிகுளம் கிளை சகோதரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்துக்கு உள்ளான 2 நபர்களை ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனை அனுப்பிவைத்து. பின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கப்பட்டது.


    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

What they says

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நடுத்தெரு, நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம். branch@nachikulamtntj.com
.Designed - Developed by : Mohamed Azarudeen.
back to top