நாச்சிகுளம், ஜும்ஆ பள்ளிதெரு முகம்மது நாசிர் (சீமான்) அவர்களின் தகப்பனாராகிய வருசை முகம்மது அவர்கள் 20-5-2013 இன்று இரவு 8 மணியளவில் இறைவனிடம் சேர்ந்தார்கள்.
நாச்சிகுளம் வாழ் அமீரக கிளை சார்பாக கடந்த 10-5-2013 அன்று ஒருங்கினைப்பு கூட்டம் துபாய் ஹோரலன்ஸ் மர்கஸில் அஷர் தொழுகைக்கு பிறகு மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
இதில் துபாய் மண்டல செயலாளர் அஸ்ரப் அலி முன்னிலையில் M.K.S.நெய்ன முஹம்மத் அவர்கள் தலைமைலும் நடைபெற்றது.
இதில் நாச்சிகுளத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக தௌஹீத் பள்ளி இமாம் சகோ. அப்துல்லாஹ் அவர்கள் “இறை நம்பிக்கையாளனின் பண்புகள்” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.
இதில் நாச்சிகுளம் கிளையை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனையை வழங்கினார்கள். துவாவுடன் அமர்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 6-5-2013 அன்று சிறுவர்கள் சிலர் தங்களாக முன்வந்து தவ்ஹீத் பள்ளியில் தினமும் பாங்கு சொல்வாதாகவும், அதற்கான அட்டவனையை தாயரித்து தங்களுக்குள் தேதியையும் பரித்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 7-5-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் தவ்ஹீத் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் ”கொள்கை உறுதியா? குறிதி உறவா?” என்ற தலைப்பில் கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும் என்ற உரை மக்களுக்கு ஈமானை உறுதிபடுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 2-5-2013 அன்று முத்துப்பேட்டை புலனாய்னு பிரிவு அதிகாரி (C.I.D) அவர்களுக்கு தவ்ஹீத் பள்ளியில் தாவா செய்து, அவருக்கு ”மாமனிதர் நபிகள் நாயகம்” புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 5-5-2013 அன்று தவ்ஹீத் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. அமீன் அவர்கள் ”அனுமதி கோருதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருவாரூர் மாவட்டம் பொதுக்குழு 5-5-2013 அன்று நடைபெற்றது. இதில் தாவா மற்றும் சமுதாய சேவைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அளவில் நாச்சிகுளம் கிளை இரத்ததானத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான பரிசுகளை மாநில செயலாளர் அப்துல்ரஹ்மான் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.
அதே போன்று மாவட்ட அளவில் தாவா பணிகளில் 7-வது இடத்தை பிடித்ததற்காக மாவட்ட பொருளாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் அதற்கான பரிசுகளை கிளை தலைவரிடம் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.
நாச்சிகுளம் கிளையில் 3-5-2013 இன்று முருகானந்தம் என்ற மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியலாக ஏற்று தன் பெயரை பரக்கத்துல்லாஹ் என்று மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இமாம் அப்துல்லாஹ் அவர்கள் நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளியில் வைத்து தாவா செய்து, மார்க்க புத்தகங்களை வழங்கினார். அல்லாஹ் அக்பர்.
நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 1-5-2013 அன்று முதல் ஆண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
இதில் இமாம் அப்துல்லாஹ் அவர்கள் ஆண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கான பயிற்சி வகுப்பாக இரண்டு பிரித்து வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. இன்ஷா அல்லாஹ் 10-5-2013 வரை இந்த வகுப்புக்கள் நடைபெறும்.
பெண்களுக்கு தனியாக இன்ஷா அல்லாஹ் 6 தேதி முதல் துவங்கும்.